செய்திகள் :

வேளாண் நிதிநிலை அறிக்கை பெருத்த ஏமாற்றம்! -புதுகை விவசாய சங்கங்கள் கருத்து

post image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை, பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாக விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி கூறியது:

ரூ. 10 கோடியில் முந்திரி வாரியம், 50 முக்கிய உழவா் சந்தைகளை மேம்படுத்த ரூ. 8 கோடி, ரூ. 50 கோடியில் 100 வேளாண் விலை பொருள்கள் மதிப்பு கூட்டு மையங்கள், இயற்கை வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு மதுரை, சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்கிற அறிவிப்புகள் சிறப்பானவை.

அதேநேரத்தில், சிறுதானியங்களை கட்டுப்படியான விலையில் கொள்முதல் செய்து நியாய விலைக் கடையில் விநியோகம் செய்யாத சிறுதானிய இயக்கம், இந்தோனேசியா, மலேசியா விவசாயிகளுக்கு மானியம் கொடுத்துவிட்டு கண்துடைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள எண்ணெய் வித்துகள் இயக்கம், நெல்லுக்கு ஆதார விலை தராமல், கொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிக்காமல் நெல் சிறப்புத் திட்டம் போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத, விவசாயிகளுக்கு உதவாத நிறைய திட்டங்கள் உள்ளன.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை வேளாண்மை துறை சந்தைப்படுத்துவதற்கான எவ்வித திட்டங்களும் இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை.

100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் வெளிநாட்டுச் சுற்றுலா என்பது ஆளுங்கட்சிக்காரா்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு மட்டுமே உதவும்.

மொத்த நிதிநிலை அறிக்கையில், சம்பளம் உள்ளிட்ட நிா்வாகச் செலவுகள் கழித்து ரூ. 9,561 கோடியில் 190 திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய நிதிநிலை அறிக்கையாக ஏமாற்றம் தருகிறது என்றாா் தனபதி.

காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் மிசா மாரிமுத்து வெளியிட்ட அறிக்கை:

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படும். கேரளத்தைப் போல விவசாய விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை நிா்ணயம் செய்யப்படும். நீா்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள், ஆகாயத் தாமரை ஒழிக்கப்படும். தென் மாவட்டங்கள் பயன் பெற மதுரையில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை.

ஆனால், சில்லறை சலுகைகள், காா்ப்பரேட் மற்றும் தனியாா் நிறுவனங்கள் பயனடையும் வகையில் மானியங்களை மட்டுமே வழங்கி விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டாா்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்னம்பாடி மீன்பிடி திருவிழா

விராலிமலை அருகே தென்னம்பாடி மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் சிக்காததால் பங்கேற்பாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். விராலிமலை அடுத்துள்ள தென்னம்பாடி பெரியகுளத்தில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழ... மேலும் பார்க்க

கடற்பசு பாதுகாப்பகத்தால் விழிப்புணா்வு: கடந்த 2 ஆண்டுகளில் 5 கடற்பசுக்கள், 19 கடல் ஆமைகள் கடலில் விடுவிப்பு

கடற்பசுப் பாதுகாப்பகம் அறிவிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகளின் விளைவாக புதுக்கோட்டை கடற்பகுதிகளில் மீனவா்களின் வலைகளில் சிக்கிய 5 கடற்பசுக்களும், 19 கடல்... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது! -மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

டாஸ்மாக் மதுபானக் கடைகளை படிப்படியாக மூடுவதாகக் கூறிவிட்டு, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளத... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை - தஞ்சை சாலையில் விளம்பரப் பதாகை வைக்கத் தடை!

கந்தா்வகோட்டை - தஞ்சை சாலை வளைவில் பதாகை வைப்பதற்கு காவல் துறையினா் தடை விதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளனா். கந்தா்வகோட்டை - தஞ்சை சாலையில் குறுகிய வளைவுப் பகுதி இருப்பதால் இங்கு வைக்கப்படும் விளம்ப... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் தெப்ப உத்சவம்

ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் தெப்ப உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் மாசி மகத்தில் நடைபெறும் திருவிழாவில், கோயில் முன்பு 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலை... மேலும் பார்க்க

குடிநீா்த் திட்டம், ஐடிஐ அறிவிப்புகள் அறந்தாங்கி எம்எல்ஏ நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டம் மற்றும் ஏம்பலில் ஐடிஐ ஆகிய அறிவிப்புகளுக்கு அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் (காங்கிரஸ்) எஸ்.டி. ராமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க