செய்திகள் :

`கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம் நான் கொண்டுவந்தது, ஆனால் ஸ்டாலின்...' - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

post image

நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமான திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் விதமாக கண்ணாடி பாலத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கடலுக்கு நடுவே திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதனால் வெள்ளிவிழாவும் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர், "திருவள்ளுவர் தமிழர்களுக்கு மிகப்பெரிய உலக அடையாளம், திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். அதனால் கொண்டாடுகிறோம்." எனப் பேசியிருந்தார்.

dmk

இந்த நிலையில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை பாலம் தனது ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "நேற்றைய தினம் முதலமைச்சர் கன்னியாகுமரி சென்று கண்ணாடி பாலத்தைத் திறந்து வைத்திருக்கிறார். அது அவர் கொண்டுவந்ததில்லை. அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் அது. 2018-ல் நிதின் கட்கரி கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில், நான் அவரிடம் கோரிக்கை வைத்தேன். அவர் ஏற்றுக்கொண்டார். சாகர் மாலா திட்டத்தின் கீழ் அது கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு நிதின் கட்கரி மாற்றப்பட்டார்.

அடுத்த கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா, சென்னைக்கு வந்தபோது தலைமை செயலகத்தில் என்னை வந்து சந்தித்தார். நான் கோரிக்கை வைத்த மூன்றே நாள்களில் அனுமதி கொடுத்தார். நாங்கள் சுற்றுச்சூழல் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றோம். ஆனால் 2020ல் கொரோனா வந்ததனால் பணிகள் தடைபட்டுவிட்டன. அதைத்தான் ஸ்டாலின் மாடல் அரசு டெண்டர் விட்டு பணிகளை முடித்திருக்கிறது. இதைக் கொண்டுவந்தது அ.தி.மு.க அரசாங்கம் என்பதை சொல்லிக்கொள்கிறேன்" எனப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

வேலூர்: 'வீட்டுக்கு வந்திருப்பது யார் என்றே தெரியவில்லை' - அமலாக்கத்துறை சோதனை குறித்து துரைமுருகன்

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே இது தொடர்பாக சென்னையில் வழக்க... மேலும் பார்க்க

`குற்றவாளிகளை காப்பாற்றாமல் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்' - அண்ணா பல்கலை., சம்பவம் குறித்து ஜோதிமணி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, “எங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் அதற்கு எதிராக பலத்த குரல் கொடுக்க வேண்டியது அனைவரது கடமை. பாலியல் விவகாரம் த... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., விவகாரம்: `மௌனமாக இருப்பது வெட்கக்கேடு..' - திமுக கூட்டணிக் கட்சிகளைச் சாடும் வாசன்

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் உள்ளிட்ட டெல்டா மண்டலங்களுக்கு உட்பட்ட 19 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக... மேலும் பார்க்க

`சரத் பவார் கடவுள் போன்றவர்' - பவார் குடும்பம் ஒன்று சேர அஜித் பவார் தாயார் சிறப்பு வழிபாடு

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ், துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக பிரிந்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு மத்தியில் நடந்த மக்களவைத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத... மேலும் பார்க்க

”வைரமுத்துவைப் பற்றி நான் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை” - சொல்கிறார் கங்கை அமரன்

புதுக்கோட்டைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகைதந்த கங்கை அமரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த காலங்களில் திரைப்படங்களில் நல்ல கதை இருந்தது. ஆனால், தற்போது வரும் திரைப்படங்களில் க... மேலும் பார்க்க

”எனக்கும் கூட்டணி மந்திரி சபை வேண்டும் என்ற விருப்பம் உள்ளது” - கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்

புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தற்போது நடைபெறும் விசாரணைகளை கடந்து,சமு... மேலும் பார்க்க