செய்திகள் :

`சரத் பவார் கடவுள் போன்றவர்' - பவார் குடும்பம் ஒன்று சேர அஜித் பவார் தாயார் சிறப்பு வழிபாடு

post image

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ், துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக பிரிந்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு மத்தியில் நடந்த மக்களவைத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. சரத் பவார் அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்ததால் சரத் பவார் குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அஜித் பவார் மற்றும் சரத் பவார் அணிகள் மீண்டும் இணையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இரு அணி தொண்டர்களிடமும் எழுந்துள்ளது. ஏற்கெனவே அஜித் பவாரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் டெல்லியில் சரத் பவார் பிறந்த நாளில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தனர். அதன் பிறகு இந்த இணைப்பு பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்திருக்கிறது.

துணை முதல்வர் அஜித் பவாரின் தாயார் ஆஷா பவார் இதற்காக கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி இருக்கிறார். பவார் குடும்பம் மீண்டும் ஒன்று சேரவேண்டும் என்று வேண்டி பண்டர்பூரில் உள்ள பாண்டுரங்கன் கோயிலில் புத்தாண்டு அன்று ஆஷா பவார் சிறப்பு வழிபாடு நடத்தினார். இது குறித்து ஆஷா பவார் கூறுகையில், ``அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரவேண்டும். அஜித் பவாரும், சரத் பவாரும் ஒன்று சேரவேண்டும். எனது பிரார்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்தார். இதே கருத்தை இரு கட்சி நிர்வாகிகளும் விரும்புகின்றனர். ஒரு நேரத்தில் சரத் பவாருக்கு மிகவும் விசுவாசமாக இருந்துவிட்டு இப்போது அஜித் பவார் அணியில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் இது குறித்து கூறுகையில்,''பவார் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.

சரத் பவார் எங்களுக்கு கடவுளை போன்றவர். சரத் பவார் எங்களின் தெய்வம். அவர் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். பவார் குடும்பம் ஒன்று சேர்ந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம். என்னை பவார் குடும்பத்தில் ஒருவராகவே நான் கருதுகிறேன்'' என்றார். இது குறித்து அஜித் பவார் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ நர்கரி கூறுகையில், ``இருவரும் ஒன்று சேரவேண்டும் என்பதுதான் கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்காக நான் அஜித் பவாரை சந்தித்து பேசுவேன். சரத் பவார் அனைத்து சமுதாயத்திற்காகவும் ஓயாது உழைத்துக்கொண்டிருக்கிறார். இது தொடர வேண்டும்'' என்றார். தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) கட்சி செய்தித் தொடர்பாளர் அமோல் மித்கரி இது குறித்து கூறுகையில், ''சரத் பவாரும், அஜித் பவாரும் முயற்சி எடுத்தால் இருவரும் இணைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சரத் பவார் கட்சியில் இருக்கும் ஜிதேந்திர அவாத் மற்றும் சரத் பவாரின் பேரன் ரோஹித் பவார் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

தாயாருடன் அஜித் பவார்

இணைப்புக்கு அவர்கள் ஆதரவு கொடுக்கமாட்டார்கள். ஆஷா பவாரின் பிரார்த்தனையை இரு அணிகளும் பகிர்ந்து வருகின்றனர். இருவரும் இணைவார்கள் என்று நம்புகிறேன்' 'என்று குறிப்பிட்டார். இது குறித்து சரத் பவார் கட்சி எம்.எல்.ஏ ஜிதேந்திர அவாத் கூறுகையில், ''இரு அணிகளும் ஒன்று சேருவது தொடர்பாக நான் முடிவு எடுக்கமுடியாது. இது குறித்து இரு பவாரும் தான் முடிவு செய்யவேண்டும். இரு அணிகளின் இணைப்புக்கு ஆஷா பவார் விரும்பினால் அது அவர்களது குடும்ப பிரச்னை. அவர்கள்தான் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். இதில் எனது கருத்து முக்கியமில்லை" என்று தெரிவித்தார். மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலேயிடம் இது குறித்து பேசியபோது, இரண்டு பவார்களும் மீண்டும் ஒன்று சேர்ந்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அது அவர்களது முடிவு என்று தெரிவித்தார்.

விழுப்புரம்: சு.வெங்கடேசன் எம்.பி-க்கு நெஞ்சுவலி - மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு கடந்த 3-ம் தேதி முதல் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விழுப்புர... மேலும் பார்க்க

புது உறவு தொடக்கம்? - மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸை புகழ்ந்து தள்ளும் சரத் பவார் மகள், உத்தவ் கட்சி

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாள்களுக்கு முன்பு நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலிக்கு சென்றார். அங்கு 11 நக்சலைட்கள் பட்னாவிஸ் முன்னிலையில் சரணடைந்தனர். இதனை பிரதமர் நரேந்தி... மேலும் பார்க்க

`கே.பாலகிருஷ்ணனின் பேச்சு தோழமையைச் சிதைக்கும்..!' - முரசொலி காட்டம்; திமுக கூட்டணியில் சலசலப்பா?

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.இம்மாநாட்டில் பேசிய சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர... மேலும் பார்க்க

Duraimurugan-க்கு வந்த ரிப்போர்ட், Stalin தந்த Alert! | Elangovan explains | Vikatan

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,துரைமுருகன், கதிர் ஆனந்த் இடங்களில் இரண்டாவது நாளிலும் தொடர்ந்த அமலாக்கத்துறை ரெய்டு. இதில், நள்ளிரவில் துரைமுருகனுக்கு போன முக்கியமான ரிப்போர்ட். 'இவையெல்லாம் டெல்லியின் கேம... மேலும் பார்க்க

துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு - பின்னணியில் 2019 வழக்கு?

அமலாக்கத்துறை சோதனை!கடந்த 3-ம் தேதி அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரின் மகன் கதிர் ஆனந்த்துக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றிருக்கிறது. மேலும், வேலூர் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீ... மேலும் பார்க்க