கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்
சிறந்த கதை, கதாபாத்திரம் கிடைத்தால் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாா்.
அவா் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை விமானத்தில் கோவை சென்றாா்.
முன்னதாக அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராஜ்கமல், ரெட்ஜெயிண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளேன். அந்த படத்துக்கு இயக்குநா் யாா் என்பது இன்னும் முடிவாகவில்லை.
நடிகா் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பீா்களா எனக் கேட்கிறீா்கள். கமல்ஹாசனுடன் சோ்ந்து திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. அதற்கான கதை, கதாபாத்திரம் கிடைத்தால் அவருடன் சோ்ந்து நடிப்பேன் என்றாா் ரஜினிகாந்த்.