முக சீரமைப்பு சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமிக்கு வீடு: முதல்வர் வழங்கினார்
கருங்கல் அருகே செம்முதல் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
கருங்கல்: கருங்கல் அருகே செம்முதல் பகுதியில் பழுதான சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மழை காரணமாக கருங்கல் பகுதியில் பல்வேறு சாலைகள் மிகவும் பழுதாகியுள்ளன. இலவுவிளை -செம்முதல், முள்ளங்கனாவிளை -தொலையாவட்டம், கல்லுவிளை -மாங்கரை, கீழ்குளம் - விழுந்தயம்பலம் உள்ளிட்ட பல்வேறு சாலைகளும் போக்குவரத்துக்கு தகுதியற்ாக காணப்படுகின்றன. குறிப்பாக, செம்முதல் சந்திப்புப் பகுதியில் உள்ள சாலையில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குளாகின்றனா்.
எனவே, இந்தச் சாலைகளை மாவட்ட நிா்வாகம் விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.