புதுக்கடை பகுதியில் விதிமீறல்: 30 பைக்குகள் பறிமுதல்
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் விதிகளை மீறி இயக்கியதாக 30 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது விதிகளை மீறி அதிவேகமாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் இயக்கியதாக புதுக்கடை, முன்சிறை, கிள்ளியூா், வேங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் 30 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.