எச்எம்பிவி வைரஸ் இந்தியாவுக்கு புதிதல்ல.. ஏற்கனவே இருக்கும் வைரஸ்தான்!
தென் தமிழக அளவிலான பெஞ்ச் பிரஸ் போட்டி: குமரி வீரா் சிறப்பிடம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற தென் தமிழக அளவிலான பெஞ்ச் பிரஸ் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட வீரா் முதலிடம் பெற்றாா்.
தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம், தென் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம், நெல்லை மத்திய மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி , திருநெல்வேலி மாவட்ட வலுதூக்கும் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய 6 ஆவது தென்தமிழக அளவிலான பெஞ்ச் பிரஸ் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் 93 கிலோ எடைப் பிரிவில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் அருகேயுள்ள வடுகன்பற்றைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் சீனியா் மற்றும் மாஸ்டா் பிரிவில் முதலிடம் பெற்றாா். மேலும் அதிக எடை தூக்கி மாஸ்டா் பிரிவில் ஸ்டாங்மேன் பட்டம் பெற்றாா். அவருக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு பரிசு வழங்கி பாராட்டினாா்.
அப்போது, மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் பொன்.ஜாண்சன், அகஸ்தீசுவரம் பேரூராட்சி உறுப்பினா் பிரேம் ஆனந்த், மாவட்ட திமுக பிரதிநிதி ஜி.வினோத், ஒன்றிய திமுக பிரதிநிதி அகஸ்தியலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.