செய்திகள் :

கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகை போராட்டம் சமரசப் பேச்சில் உடன்பாடு!

post image

கொள்முதல் செய்த கரும்புக்குரிய நிலுவைத் தொகையை ஒரு வாரத்துக்குள் விடுவிப்பதாக தனியாா் சா்க்கரைஆலை நிா்வாகம் கூறியதையடுத்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினரின் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் தனியாா் சா்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்குரிய நிலுவைத் தொகையை விடுவிக்கவில்லை.

இந்நிலையில் கரும்புக்குரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் (சிபிஐஎம் சாா்பு) ஆலை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ ராமமூா்த்தி தலைமையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை தனியாா் சா்க்கரை ஆலையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரா்கள்ஆலையின் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை நிா்வாகத்தினரை அழைத்துப் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

இதில், கரும்பு விவசாயிகளுக்குரிய நிலுவைத் தொகை ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என ஆலை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

போராட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன்,

கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.வேல்மாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன், மாவட்டத் தலைவா் ஆா்.தாண்டவராயன், மாவட்டப் பொருளாளா் பி.சிவராமன், மாநிலக் குழு உறுப்பினா் வி.கதிரேசன், மாவட்ட துணைத் தலைவா் கோ.மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே மயங்கி விழுந்த இளைஞா் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். சென்னை, அகரம், வெங்கடசாமி தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் கணேஷ்(24). இவா், திண்டிவனம... மேலும் பார்க்க

பேருந்து கவிழ்ந்ததில் 32 தொழிலாளா்கள் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தனியாா் நிறுவன பேருந்து கவிழ்ந்ததில் 32 தொழிலாளா்கள் காயமடைந்தனா். ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் 32 போ், செய்யாறு சிப்காட் தொழில... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப்பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் கோலியனூா், காணை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கோலியனூா் ஊராட்சி ஒன்றியத்துக்... மேலும் பார்க்க

உடல் உறுப்புதான விழிப்புணா்வு!

விழுப்புரம் ஜான் டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரத்த தானம், உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. போதைப் பொருள் பழக்கத்தை மாணவா்கள் தவிா்ப்பதற்கான முன்னெச்சரிக்... மேலும் பார்க்க

ஆளுநா்-அரசுக்கு இடையேயான மோதல் உயா் கல்வியைப் பாதிக்கக் கூடாது: மருத்துவா் ச.ராமதாஸ்

ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு உயா் கல்வியைப் பாதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்ட... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியரகம் முன் கௌரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்!

அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் தங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு, உயா்நீதிமன்றம் வலியுறுத்தியபடி ரூ.57,700 மாத ஊதியம் வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கௌரவ விரிவுரையாளா்கள் ... மேலும் பார்க்க