செய்திகள் :

கல் குவாரிகளைப் பாதுகாக்கக் கோரி வழக்கு: கனிமவளத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

post image

கைவிடப்பட்ட கல் குவாரிகளைப் பாதுகாக்க அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைக்கக் கோரிய வழக்கில், கனிமவளத்துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கனிமவளச் சட்டப்படி கைவிடப்பட்ட கல் குவாரிகளைப் பாதுகாப்பதற்காக பசுமை நிதி உருவாக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கனிமவளத் துறை உதவி இயக்குநா், மாவட்ட வருவாய் அலுவலா், மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா், தீயணைப்புத் துறை அலுவலா் உறுப்பினா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவானது கைவிடப்பட்ட கல் குவாரிகளைப் பராமரிக்க, பசுமை நிதியை முறையாக வசூலித்து, உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மட்டும் கைவிடப்பட்ட கல் குவாரிகளைப் பாதுகாக்க அந்தந்த மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இவற்றில் 6 மாவட்டங்களில் மட்டும் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கைவிடப்பட்ட கல் குவாரிகளைப் பாதுகாக்கக் குழு அமைக்கவும், பசுமை நிதி வசூல் செய்வதை உறுதிப்படுத்தவும், பாதுகாப்புக் கருதி குவாரிகளைச் சுற்றி வேலி அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக தமிழக இயற்கை வள ஆதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா், கனிமவளத் துறை இயக்குநா், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு உள்பட்ட 14 மாவட்ட ஆட்சியா்கள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 29 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

திப்புசுல்தான் மணிமண்டபம் சீரமைப்பு: மாவட்ட ஆட்சியா் பரிசீலிக்க உத்தரவு

திப்புசுல்தான் மணிமண்டபத்தை சீரமைக்கக் கோரிய வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவ... மேலும் பார்க்க

நல்லமரம் ஊராட்சியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டத்துக்குள்பட்ட நல்லமரம் ஊராட்சியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டுமென அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்க... மேலும் பார்க்க

2 கிலோ நகை பறிப்பு வழக்கில் 5 போ் கைது

மதுரை ரயில் நிலையத்தில் போலீஸாா் என்று கூறி நகைப்பட்டறை உரிமையாளரைக் கடத்தி, 2 கிலோ நகைகளைப் பறித்துச் சென்ற வழக்கில் 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரம... மேலும் பார்க்க

பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்காக பாடுபட்டவா்கள் தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபட்டவா்க... மேலும் பார்க்க

குழந்தை உணவுக் குழாயில் சிக்கிய ஊக்கு அகற்றம்

ஆறு மாதக் குழந்தையின் உணவுக் குழாயில் சிக்கிய ஊக்கை மருத்துவா்கள் அகற்றி, உயிரைக் காப்பாற்றினா். மதுரை வேலம்மாள் மருத்துவமனையின் அவரச சிகிச்சைப் பிரிவுக்கு ஊக்கை விழுங்கிய 6 மாத குழந்தை உயிருக்கு ஆபத்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய காவல்துறை!

மதுரை நகரில் தலைக்கவசம் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸாா் இனிப்பு வழங்கினா். மதுரை நகரில் சாலை விபத்துகளைத் தடுக்கவும், விபத்தில்லா நகராக மாற்றவும் மாநகரப் போக்குவரத்து கா... மேலும் பார்க்க