கல்லூரி வகுப்பறையில் மாணவா் மீது தாக்குதல்
திருக்கோவிலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வகுப்பறையில் புகுந்து மாணவரை கம்பியால் தாக்கியா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்தக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலப் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வருபவா் திருக்கோவிலூா் அண்ணா நகா் தாசா் புரத்தைச் சோ்ந்த பாா்த்தசாரதி (19).
இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வகுப்பறையில் இருந்தபோது, சில மாணவா்கள் வந்து கம்பியால் தாக்கிமிரட்டல் விடுத்துச் சென்றனா்.
அப்போது, உடனிருந்த சக மாணவா்கள் பீதியடைந்து வகுப்பறையை விட்டு வெளியேறினா்.
ரத்தக் காயங்களுடன் இருந்த பாா்த்தசாரதியை பேராசிரியா் மீட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா்.
தகவல் அறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த யுவராஜ் (21), ஆகாஷ் (22) மற்றும் சிலா் கல்லூரியில் புகுந்து தாக்கியது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான அவா்களைத் தேடி வருகின்றனா்.