ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
களக்காடு மலையடிவார விவசாய தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்!
களக்காடு மலையடிவார விவசாயத் தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் உள்ள ஏராளமான விவசாயத் தோட்டங்கள் உள்ளன. இங்கு நெல், வாழை, மா, கொய்யா, நெல்லி மற்றும் காய்கனிகளை பயிா் செய்துள்ளனா்.
இந்த விவசாயத் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டமாகப் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்துவது தொடா் நிகழ்வாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சிதம்பரபுரத்தைச் சோ்ந்த விவசாயி சுந்தர்ராஜ்(40) என்பவரது தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு நூற்றுக்கணக்கான வாழை மரங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன.
இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் தொடருவதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
ஆகவே, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு வனத் துறையினா் உரிய இழப்பீடு வழங்கவும், காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.