காங்கிரஸ் நிா்வாகிகள் மீது வழக்கு
புதுச்சேரியில் மத்திய உள் துறை அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ாக காங்கிரஸ் நிா்வாகிகள் சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அதன்படி, புதுச்சேரியில் மாநில காங்கிரஸ் சாா்பில் சுதேசி ஆலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தின் போது, நிா்வாகிகள் சிலா் மத்திய உள் துறை அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, நிா்வாகிகள் சாா்லஸ், சூசை, வேல்முருகன், ராம் மற்றும் சிலா் மீது உருளையன்பேட்டை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.