செய்திகள் :

காங்கோவில் 2வது விமான நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிப்படை?

post image

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மற்றொரு விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் கிளர்ச்சிப் படையொன்று தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் ஆதரவுப்பெற்று காங்கோவினுள் இயங்கி வரும் கிளர்ச்சிப் படையான 'எம்23' (M23), தெற்கு கிவூ மாகாணத்திலுள்ள கவுமு விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் தங்களது கட்டுப்பாட்டில் 2வது விமான நிலையத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறியுள்ளது.

இருப்பினும், இதுகுறித்து அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது கருத்தை பதிவு செய்யாததினால், காங்கோவின் கவுமு தேசிய விமான நிலையம் எம்23 கிளர்ச்சி படையினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இதையும் படிக்க: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் வட கிவூ மாகாணத்தின் தலைநகர் கோமாவை கைப்பற்றிய எம்23 கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

அதன் பின்னர், தெற்கு கிவூ மாகாணத்தின் கவுமு விமான நிலையத்தை குறிக்கோளாகக் கொண்டு முன்னேறி வந்த அவர்கள் இன்று (பிப்.14) அதனைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

காங்கோவின் கனிம வளம் அதிகமுள்ள கிழக்கு பகுதிகளின் கட்டுப்பாட்டிற்காக போட்டியிடும் 100க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்களில் மிக முக்கியமான M23 கிளர்ச்சியாளர்கள்,தெற்கு கிவு மாகாணத்தின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி வருகின்றனர்.

தொடர்ச்சியாக, கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையில் நடக்கும் தாக்குதல்களினால் தற்போது வரை 2,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் இடமாற்றப்பட்டுள்ளதாக ஐநா ஆணையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நகைக்காக தலையணை வைத்து பெண் கொலை!

பென்னாகரம்: பெண்ணைத் தலையணை வைத்து கொலை செய்து, மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பென்னாகரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைத் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து கழுத்தில் அணிந்திருந்த தாலி... மேலும் பார்க்க

திமுக ஆட்சி இருண்ட காலத்தைவிட மோசம்: அண்ணாமலை

தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தைவிட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை கொலைச் சம்பவம் தொடர்பாக தன்... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 15) ரூ. 800 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 80 உயா்ந்து ரூ. 8060-க்கும், பவுனுக... மேலும் பார்க்க

நாடுகடத்தப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளதா? ப. சிதம்பரம் கேள்வி

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவா்கள... மேலும் பார்க்க

சத்தீஸ்கரிலிருந்து கும்பமேளா சென்றவர்கள் கார் விபத்து: 10 பேர் பலி!

மகா கும்பமேளாவுக்கு சத்தீஸ்கரில் இருந்து பக்தர்கள் சென்ற கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். மேலும் பார்க்க

இபிஎஸ்ஸின் குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்: முதல்வர் ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமியின் குரலே,பா.ஜ.க.விற்கான டப்பிங்குரல்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க