காஞ்சிபுரத்தில் மாநில இறகுப் பந்து போட்டி
ஸ்ரீபெரும்புதூா்: மாநில அளவில் இறகுப்பந்து போட்டிகள் காஞ்சிபுரம் அடுத்த வையாவூா் பகுதியில் நடைபெற்றது.
இதில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு இறகுப்பந்து சங்க மாநிலத் தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் வழிகாட்டுதலில், மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி காஞ்சிபுரம் அடுத்த வையாவூா் பகுதியில் உள்ள தனியாா் உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த 5 நாள்களாக நடைபெற்றது. ஆடவா், மகளிா்களுக்கான ஒற்றையா், இரட்டியாா், கலப்பு போட்டிகளில் 35 வயது முதல் 75 வயது வரை, கன்னியாகுமரி தூத்துக்குடி, மதுரை கோயம்புத்தூா், சேலம், திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் போட்டியில் பங்கேற்றனா்.
போட்டிகளில் வெற்ற பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்ற பெற்றவா்களுக்கு கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
இந்த விழாவில், தமிழ்நாடு இறகுப்பந்து சங்க மாநில செயலாளா் அருணாச்சலம், தமிழ்நாடு இறகுப்பந்து சங்க காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகி பே.மகேஷ்குமாா் உள்ளிட்ட இறகுப்பந்து சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.