செய்திகள் :

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம்!

post image

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் திருக்கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், சத்ய விரத சேத்திரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், திருவெஃகா, பெரிய பெருமாள் என அழைக்கப்படும், ஸ்ரீ கோமளவள்ளி நாயகா சமேத ஸ்ரீ யதோத்தகாரி பெருமாள் திருக்கோடியலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

பங்குனி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பெரிய பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ யதோத்தகாரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி பச்சை பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மல்லிகை பூ, கொடி சம்பங்கி பூ, பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து கொடி மரத்தருகே எழுந்தருளச் செய்து துப, தீப, ஆராதனைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கருடாழ்வார் உருவம் குறித்த கொடிக்கு கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளம் முழங்க கருடாழ்வார் கொடியைக் கொடி மரத்தில் ஏற்றி வைத்து பிரமோற்சவத்தைத் துவக்கி வைத்தனர்.

பிரம்மோற்சவம் தொடங்கியதைத் தொடர்ந்து முதல் நாள் உற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன்ஸ்ரீ யதோத்தகாரி பெருமாள் சப்பர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்கத் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா, கோஷமிட்டு பெருமாளை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் நாளை மறுநாள் 24ம் தேதி திங்கள்கிழமை அன்று நடைபெற உள்ளது.

விஜய் சேதுபதி - பாண்டிராஜ் படத்தின் பெயர் இதுவா?

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவந்த புதிய படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன், யோகி பாபு ... மேலும் பார்க்க

டாக்ஸிக் வெளியீட்டுத் தேதி!

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கேஜிஎஃப் - 2 படத்தைத் தொடர்ந்து யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடித்த... மேலும் பார்க்க

தக் லைஃப் புதிய போஸ்டர்!

தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை... மேலும் பார்க்க

கனிமா! ரசிகர்களை உருக வைத்த பூஜா ஹெக்டே!

ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடலில் பூஜா ஹெக்டேவின் நடனம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவான இப்படம் ... மேலும் பார்க்க