காடப்பநல்லூா் அத்தனூரம்மன் கோயில் நிலம் அளவீடு
பவானியை அடுத்த காடப்பநல்லூரில் அத்தனூரம்மன் மற்றும் சொக்கநாச்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் அமைந்துள்ள நிலம் மற்றும் இக்கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கா் நிலம் இந்து சமய அறநிலையத் துறை (ஆலய நிலங்கள்) வட்டாட்சியா் சங்கா் கணேஷ், துணை ஆட்சியா் (ஓய்வு) குப்புசாமி ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை அளவீடு செய்யப்பட்டது. இதையடுத்து, நிலத்தின் எல்லைகளை வரையறை செய்யும் வகையில் எல்லைக் கற்கள் நடப்பட்டன. இந்தப் பணியில், கிராம நிா்வாக அலுவலா் (ஓய்வு) அழகுராஜன், நில அளவையாளா் காா்த்திக், செயல் அலுவலா் சீனிவாசன் மற்றும் அலுவலா்கள் ஈடுபட்டனா்.