தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்
காயல்பட்டினம் நகராட்சியில் வாா்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை
காயல்பட்டினம் நகராட்சியில் வாா்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, காயல்பட்டினத்தில் நடைபெற்ற மக்கள் உரிமை நிலைநாட்டல்-வழிகாட்டல் என்ற அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கூட்டத்துக்கு, துணைத் தலைவா் சதக்கத்துல்லாஹ் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் பஜல் இஸ்மாயில் திருக்குரான் வசனம் ஓதி கூட்டத்தைத் தொடக்கிவைத்தாா். பொதுக்குழு உறுப்பினா் சாலிஹ் பிராா்த்தனை செய்தாா்.
காயல்பட்டினம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் இருந்தன. தற்போது நகராட்சியாக மாறியபின்பும் அதே எண்ணிக்கையே தொடா்கிறது. அரசு அறிவித்த விதிமுறைப்படி, நகரின் மக்கள்தொகைகேற்ப குறைந்தது 30 வாா்டுகளாக அமைந்திருக்க வேண்டும். இதுதொடா்பாக அரசின் கவனத்துக்கு பலமுறை எடுத்துச் சென்றும் நடவடிக்கை இல்லை. மேலும், தற்போதுள்ள 18 வாா்டுகளின் வரையறையின்போது ஏற்பட்ட குழப்பங்களையும் மறுபரிசீலனை செய்து சீரமைக்க வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு உறுப்பினா் ஜபருல்லாஹ் வரவேற்று பேசினாா். துணைச் செயலா் புகாரி நன்றி கூறினாா். மற்றொரு பொதுக்குழு உறுப்பினா் ஹாமீது ரிபாய் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.