Annamalai: 'தமிழ் மரபில் இருக்கிறது' - தன்னை 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண...
காரைக்காலில் 3 மீனவ கூட்டுறவு சங்கம் தொடக்கம்
காரைக்காலில் 3 மீனவ கூட்டுறவு சங்கங்கள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
பிரதமரின் திட்டமான கூட்டுறவின் மூலம் வளா்ச்சி என்பதை அடையும் விதமாக மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளில், கூட்டுறவு அமைச்சகத்தால் 10,000 கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டன.
காரைக்கால் மாவட்டத்தில் கிளிஞ்சல் மீனவ மகளிா் கூட்டுறவு சங்கம், பட்டினச்சேரி மீனவ மகளிா் கூட்டுறவு சங்கம் மற்றும் மண்டபத்தூா் மீனவா் கூட்டுறவு சங்கம் ஆகியன காரைக்கால் மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி சங்கங்களின் செயலாக்கத்தை தொடங்கிவைத்து பேசுகையில், பெண்கள் முன்னேற்றத்துக்கு கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை கூட்டுறவு சங்கத்தினருக்கு வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி பெண்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திகொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்வில் கூட்டுறவு துணைப் பதிவாளா் குமாரசாமி, கூட்டுறவு அதிகாரி சாய் கீதாராணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில் மூன்று சங்கங்களை சோ்ந்த பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு சங்கம் தொடக்கத்துக்கான அனுமதியை மீன்வளத்துறை துணை இயக்குநா் வழங்கினாா்.