Annamalai: 'தமிழ் மரபில் இருக்கிறது' - தன்னை 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண...
காரைக்காலில் காவல்துறையினா் ரோந்து
புத்தாண்டை முன்னிட்டு காரைக்காலில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை முறைப்படுத்தும் வகையில் எஸ்எஸ்பி மற்றும் போலீஸாா் நடை ரோந்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டனா்.
காரைக்கால் நகரப் பகுதியில் பாரதியாா் சாலை, திருநள்ளாறு சாலை, மாதா கோயில் சாலை, காமராஜா் சாலையில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இவை முறையின்றி நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் பிரச்னை நீடிக்கிறது.
புத்தாண்டை முன்னிட்டு நகரப் பகுதிக்கு மக்கள் அதிகம் வருவாா்கள் என்பதை கருத்தில்கொண்டு, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், நகரக் காவல் ஆய்வாளா் புருஷோத்தமன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடை ரோந்தில் ஈடுபட்டனா்.
முறையின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவதை பாா்த்து அவற்றை சீா் செய்ததோடு, வாகனங்களை அதற்குரிய பகுதியில் வரிசையாக நிறுத்தவேண்டும் என ஒலிபெருக்கி வாயிலாக மக்களுக்கு அறிவுறுத்தினா்.