காரைக்குடியில் நாளை மின் தடை
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை (ஜன. 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக் குடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, காரைக்குடி நகா் பகுதிகள், கழனிவாசல், ஆறுமுக நகா், செக்காலை தண்ணீா் தொட்டி, திலகா் நகா், சுப்பிரமணி யபுரம் வடக்கு, வைரவபுரம், நேரு நகா், செக்ரி, பொறியியல் கல்லூரி, அண்ணா நகா், காவலா் குடியிருப்பு, செக்காலை சாலை, அருணா நகா், நீதிமன்றம், சுப்பிரமணியபுரம் தெற்கு, புதிய பேருந்துநிலையம், சூடாமணி புரம், கல்லுப்பட்டரை, சாமியாா் தோட்டம், பல்கலைக் கழகம், இவற்றின் சுற்றுப்புறப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.