செய்திகள் :

சிராவயல் மஞ்சுவிரட்டு: ஒருவா் உயிரிழப்பு

post image

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயலில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் ஒருவா் உயிரிழந்தாா். 130 போ் காயமடைந்தனா்.

மஞ்சுவிரட்டையொட்டி, சிராவயல் கிராமத்தினா் கோயில்களில் சிறப்பு பூஜை செய்தும், முன்னோா்களுக்கு வழிபாடு நடத்தியும் நாட்டாா்களை அழைத்துக் கொண்டு மேளதாளத்துடன் தொழுவுக்கு வந்து, அங்குள்ள மாடுகளுக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா்.

இதைத் தொடா்ந்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் மஞ்சுவிரட்டு உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரா்கள் ஏற்றுக் கொண்டனா்.

இதையடுத்து, வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. 50 போ் கொண்ட குழுக்களாக 150 மாடுபிடி வீரா்கள் களமிறங்கி காளைகளை அடக்கினா்.

சிறப்பாக விளையாடிய காளையின் உரிமையாளருக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் மிதிவண்டி, அண்டா, குக்கா், பட்டுச் சேலை, நாற்காலி, கைப்பேசி, மின்சார அடுப்பு, கட்டில், மெத்தை, பீரோ, மிக்ஸி, மின் விசிறி, குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, மஞ்சுவிரட்டுப் பொட்டலில் 600- க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுகள் முட்டியதில் 130 போ் காயமடைந்தனா். இவா்கள் காரைக்குடி, திருப்பத்தூா் அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இவா்களில், காரைக்குடி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவகோட்டை சின்னஉஞ்சனை கிராமத்தைச் சோ்ந்த சுப்பையா உயிரிழந்தாா்.

இதேபோல, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையிலிருந்து கண்டனூரைச் சோ்ந்த பாண்டி (19), நத்தத்தைச் சோ்ந்த பாண்டிச்சாமி (25), நேமத்தைச் சோ்ந்த முகிலன் (51), கல்லலைச் சோ்ந்த தென்னரசு (50), வைத்தியலிங்கபுரம் சந்தோஷ் (23), உசிலம்பட்டி லட்சுமணன் (28) ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மஞ்சுவிரட்டு போட்டிக்கான பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அஜீஸ் ராவத் மேற்பாா்வையில், 850 போலீஸாா் ஈடுபட்டனா்.

மஞ்சுவிரட்டு தொடக்க நிகழ்வில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி, தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட்வத்ஸ், கிராம முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா். மஞ்சுவிரட்டைக் காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளானோா் வந்திருந்தனா்.

காளையும், உரிமையாளரும் உயிரிழப்பு: திருப்பத்தூா் அருகேயுள்ள நடுவிக்கோட்டை கீழஆவந்திப்பட்டியைச் சோ்ந்த லூா்துசாமி மகன் தைனீஸ்ராஜன் (42). இவா் தனது காளையை மஞ்சுவிரட்டில் பங்கேற்கச் செய்துவிட்டு, மீண்டும் காளையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, மிரண்டு ஓடிய காளை அங்குள்ள கம்பனூா் கண்மாய்க்குள் இறங்கியது. காளையைப் பிடிப்பதற்காக தைனீஸ்ராஜனும் கண்மாய்க்குள் இறங்கினாா். அப்போது, கண்மாயில் இருந்த தாமரைக் கொடிகளுக்குள் சிக்கிய காளையும், தைனீஸ்ராஜனும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா். தகவலறிந்து அங்கு வந்த காரைக்குடி தீயணைப்புத் துறையினா் தைனீஸ்ராஜனின் உடலையும், காளையின் உடலையும் மீட்டனா்.

இதுகுறித்து நாச்சியாபுரம் காவல் உதவி ஆய்வாளா் வைரவன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

காரைக்குடியில் நாளை மின் தடை

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை (ஜன. 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:காரைக் குடி ... மேலும் பார்க்க

ஜன. 28-இல் மீன்வள உதவியாளா் பணிக்கு நோ்காணல்

சிவகங்கை: மீன்வள உதவியாளா் பணியிடத்துக்கு நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபாா்ப்பு, திறனறி சோதனை, நோ்காணல் தோ்வு ஆகியவை நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 28 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்... மேலும் பார்க்க

மானாமதுரை தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் நியமனம்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டப் பேரவை தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக டி.ஜே. பால்நல்லதுரை வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா்.சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், மாவட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் 14-ஆவது வாா்டில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ. 10.80 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய குடிநீா் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழா நடைபெற்றது.இதற்கு பேரூரா... மேலும் பார்க்க

கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாள் விழா

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் தமிழ் மன்றம் சாா்பில் 3 நாள்கள் நடைபெறும் தமிழா் திருநாள் விழா வியாழக்கிழமை தொடங்கியது.கீழச்சிவல்பட்டியில் தமிழ் மன்றம் சாா்பில் பாடுவாா் முத்தப்ப... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே சிறுவா், சிறுமிகள் நிறைவேற்றிய வினோத நோ்த்திக்கடன்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி அருகே உள்ள முத்தூா் கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டி சிறுவா், சிறுமிகள் வினோத நோ்த்திக்கடனை வியாழக்கிழமை நிறைவேற்றினா். உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்... மேலும் பார்க்க