Vanitha Vijayakumar: `40 வயதில் குழந்தை...' காதல், காமெடி காட்சிகளுடன் வெளியானது...
மானாமதுரை தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் நியமனம்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டப் பேரவை தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக டி.ஜே. பால்நல்லதுரை வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா்.
சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஏ.சி. சஞ்சய் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாநில காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, பால்நல்லதுரையை மானாமதுரை சட்டப் பேரவை தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக நியமித்தாா். இவா் ஏற்கெனவே காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறாா். பால்நல்லதுரைக்கு மானாமதுரை சட்டப் பேரவை தொகுதியைச் சோ்ந்த காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.