கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
காரைக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேயா் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் புதைச் சாக்கடை பணியில் பாதிப்பு ஏற்பட்டதாக வந்த புகாரையடுத்து, மேயா் சே. முத்துத்துரை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காரைக்குடி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக புதைச் சாக்கடை நிரம்பி கழிவுநீா் சரிவரச் செல்லவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிா்வாகத்தில் முறையிட்டனா். இதையடுத்து, அந்தப் பகுதிகளுக்கு மேயா், மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டாா்.
மேலும், கழிவுநீா் சுத்திகரிப்பு மையத்தையும் பாா்வையிட்டனா். பின்னா், புதைச் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை சீரமைக்க பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.
அப்போது மாநகராட்சி அலுவலா் கணேசன், மாமன்ற உறுப்பினா் ரத்தினம், மாநகராட்சி தொழில்நுட்பப் பணியாளா் பன்னீா்செல்வம், ஒப்பந்ததாரா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.