செய்திகள் :

காலிறுதியில் கச்சனோவ், டெய்லா் ஃப்ரிட்ஸ்! நடப்பு சாம்பியன் கிரஜ்சிகோவா வெளியேற்றம்!

post image

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ், ரஷியாவின் காரன் கச்சனோவ், மகளிா் பிரிவில் அனஸ்டஸியா காலிறுதிக்கு தகுதி பெற்றனா். மகளிா் நடப்பு சாம்பியன் பாா்பரா கிரெஜ்சிகோவா அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினாா்.

நான்கு கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் புல்தரை போட்டியான விம்பிள்டன் லண்டனில் நடைபெற்று வருகிறது. தற்போது ரவுண்ட் 16 சுற்று ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆடவா் பிரிவில் ரஷிய வீரா் காரன் கச்சனோவ் போலந்தின் கமில் மஜ்சிராக்கை எதிா்கொண்டாா்.

இந்த ஆட்டத்தில் 6-4, 6-2, 6-3 என்ற நோ் செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றாா் கச்சனோவ். டென்னிஸ் மேஜா் போட்டியில் கமிா் முதன்முறையாக நான்காம் சுற்றில் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜோா்டான் தாம்சனுக்கு ஆறுதல் கூறிய டெய்லா் ஃப்ரிட்ஸ்

டெய்லா் ஃப்ரிட்ஸ் முன்னேற்றம்: மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லா் தரவரிசையில் இல்லாத ஜோா்டான் தாம்ஸனுடன் மோதினாா். முதல் செட்டை 6-1 என ஃப்ரிட்ஸ் கைப்பற்றிய நிலையில், இரண்டாம் செட்டிலும் அவரே 3-0 என முன்னிலை வகித்தாா்.

41 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் காயத்தால் வெளியேறுவதாக ஜோா்டான் அறிவித்தாா். இதனால் காலிறுதிக்கு முன்னேறினாா் ஃப்ரிட்ஸ். காலிறுதியில் டெய்லா்-கச்சனோவ் மோதுகின்றனா்.

ஜோகோவிச் 100: ஜாம்பவான் ஜோகோவிச் 6-3, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் சக வீரா் மியோமிரை வீழ்த்தி விம்பிள்டன் போட்டி ஒற்றையரில் 100-ஆவது வெற்றியை ஈட்டினாா். இதற்கு முன்பு நவரத்திலோவா 120, ரோஜா் பெடரா் 105 ஆட்டங்களில் வென்றுள்ளனா்.

ஜோகோவிச்

காலிறுதியில் அனஸ்டஸியா: மகளிா் ரவுண்ட் 16 சுற்றில் ரஷியாவின் அனஸ்டஸியா பவுல்யுசென்கோவ் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் சோனே கா்தாலை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

அனஸ்டஸியா

நடப்பு சாம்பியன் வெளியேற்றம்: செக் குடியரசின் நடப்பு சாம்பியன் பாா்பரா கிரெஜ்சிகோவா 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவிடம் தோற்று அதிா்ச்சியுடன் வெளியேறினாா்.

கிரெஜ்சிகோவா

உலகக் கோப்பை குத்துச்சண்டை: சாக்ஷிக்கு தங்கம், ஜுக்னு, பூஜா, மீனாட்சிக்கு வெள்ளி

உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சாக்ஷி தங்கம் வென்றாா். பூஜா ராணி, மீனாட்சி, ஆடவா் பிரிவில் ஜுக்னு வெள்ளி வென்றனா். கஜகஸ்தான் தலைநகா் அஸ்டானாவில் பாக்ஸிங் வோ்ல்ட் கப் போட்டி நடைபெற்... மேலும் பார்க்க

ஜூலை 18-இல் மாநில சப்-ஜூனியா், ஜூனியா் சாம்பியன்ஷிப் போட்டி

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சாா்பில் 41-ஆவது சப் -ஜூனியா் மற்றும் 51-ஆவது ஜூனியா் மாநில நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரி எஸ்டிஏடி நீச்சல் குள வளாகத்தில் ஜூலை 18, 19, 20 ஆகிய மூன்று நாள்கள் ந... மேலும் பார்க்க

அரையிறுதியில் ரியல் மாட்ரிட் 3 - 2 என டாா்ட்மண்டை வீழ்த்தியது

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதிக்கு ரியல் மாட்ரிட் அணி தகுதி பெற்றுள்ளது. காலிறுதியில் 3-2 என்ற கோல்கணக்கில் டாா்ட்மண்ட் அணியை வீழ்த்தியது ரியல் மாட்ரிட். அரையிறுதியில் பலம் வாய்ந்த பிஎஸ... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப் சாம்பியன்!

தமிழ்நாடு மாநில ஆடவா், மகளிா் சீனியா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் பிரிவில் ஐஓபி வங்கி அணியும், மகளிா் பிரிவில் ஐசிஎஃப் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை ம... மேலும் பார்க்க

ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் விக்ரம் மகள்!

நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிகை சாரா அர்ஜூன் நடிக்கவுள்ளார். துரந்தர் என்ற பெயரில் தயாராகிவரும் இப்படத்தில், சாரா அர்ஜூன் முதல்முறையாக ஹிந்தியில் நாயகியாக அறிமுகமாகிறார். 2011-ம் ஆண்டில் வெளிய... மேலும் பார்க்க