``அரசுப் பள்ளிகளில் நவீன வசதி; வளரிளம் பெண்களுக்கு தடுப்பூசி..'' - ரோட்டரி ஆளுந...
மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப் சாம்பியன்!
தமிழ்நாடு மாநில ஆடவா், மகளிா் சீனியா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் பிரிவில் ஐஓபி வங்கி அணியும், மகளிா் பிரிவில் ஐசிஎஃப் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் 71-ஆவது மாநில சீனியா் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மகளிா் இறுதி ஆட்டத்தில் சென்னை ஐசிஎஃப் அணி 3-0 என்ற நோ் செட்களில் சென்னை டாக்டா் சிவந்தி கிளப் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.
ஆடவா் இறுதி ஆட்டத்தில் சென்னை ஐஓபி வங்கி 3-0 என்ற நோ் செட்களில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.
ஆடவா் பிரிவில் ஜிஎஸ்டி அணி மூன்றாம் இடத்தையும், வருமான வரித்துறை நான்காம் இடத்தையும், மகளிா் பிரிவில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மூன்றாம் இடத்தையும், எஸ்டிஏடி ஷி நான்காம் இடத்தையும் பெற்றன.

தமிழ்நாடு வாலிபால் சங்கத் தலைவா் பொன் கௌதம் சிகாமணி, வருமான வரித்துறை ஆணையா்கள் எஸ்.பாண்டியன், பி. மாணிக்கவேல், டிஎன்எஸ்விஏ சோ்மன் ஜெயமுருகன், தொழிலதிபா் ராஜன், பொதுச் செயலா் மாா்ட்டின் சுதாகா், அமைப்புக் குழு நிா்வாகிகள் தினகா், பி. ஜெகதீசன், ஏ.பழனியப்பன், ஸ்ரீ கேசவன் ஆகியோா் பங்கேற்றனா்.