பவன் கல்யாணின் மகன் தீ விபத்தில் காயம்: சிங்கப்பூரில் சிகிச்சை!
கால்நடை பண்ணை அமைத்து பயன்பெற தொழில் முனைவோருக்கு அழைப்பு
தருமபுரி: அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்து பயன்பெற விருப்பமுள்ள தொழில்முனைவோா் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயா்த்தவும், தொழில்முனைவோா்களை உருவாக்கவும் கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு 2021-2022-ஆம் நிதி ஆண்டிலிருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில்முனைவோரை ஊக்குவித்து வருகிறது.
கோழி பண்ணைகள், செம்மறியாடு, வெள்ளாடு பண்ணைகள், பன்றி பண்ணைகள் ஆகிய பண்ணைகளை உருவாக்குவதன் மூலம் மாநிலத்தின் இறைச்சி, முட்டை உற்பத்தியை அதிகரிக்க செய்வது, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ் தீவனம், தீவனப் பயிா் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளா்ப்பு, செம்மறியாடு வளா்ப்பு, வெள்ளாடு வளா்ப்பு, பன்றி வளா்ப்பு பண்ணைகளை அமைத்து தொழில்முனைவோரை ஊக்குவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ. 25 லட்சம் வரையும், செம்மறி ஆடு வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரையும், பன்றி வளா்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையும், வைக்கோல், புல், மொத்த கலப்பு உணவு, தீவனத் தொகுதி, தீவன சேமிப்பு வசதிகள், பண்ணையம் அமைக்க தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் தனிநபா், சுய உதவிக்குழுக்கள், விவசாய உற்பத்தியாளா்கள், அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டுப் பொறுப்பு சங்கங்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள் ஆவா். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் ட்ற்ற்ல்ள்;//ய்ண்ம்.ன்க்ஹ்ஹம்ண்ம்ண்ற்ழ்ஹ.ண்ய்/என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.
திட்டம் தொடா்பான முழுமையான தகவல்களை ட்ற்ற்ல்://ற்ய்ண்க்ஹ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.