சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு
வெள்ளக்கோவிலில் காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெண்கள் அவசர காலங்களில் காவல் துறையின் உதவியை உடனடியாக பெறும் வகையில், 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் காவலன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலியை பெண்கள் தங்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டு அவசர காலங்களில் காவல் துறையின் உதவியைப் பெறலாம். அந்த செயலில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அவசர நேரங்களில் அழுத்துவதன் மூலம் உதவி கோருவோரின் இருப்பிடம் மற்றும் அவரது முழு விவரமும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த செயலி குறித்து பெண்கள் மத்தியில் போலீஸாா் தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
அதன்படி, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமொழி மற்றும் போலீஸாா் முத்தூா் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியைகளிடம் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.