குலுங்கும் மதுரை: டங்ஸ்டன் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
காவல் உதவி ஆய்வாளா் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
சென்னையில் காவல் உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனம் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் படுகாயமடைந்தாா்.
சென்னை போரூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் பக்தவத்சலம். இவா் போரூா் - முகலிவாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை ரோந்து சென்றபோது எதிரே வந்த இளைஞரின் இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பக்தவத்சலம் அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.