Doctor Vikatan: குடும்பத்தில் அனைவருக்கும் உடல்பருமன்... பரம்பரையாக பாதிக்குமா இ...
காவிரி சரபங்கா உபரி நீரேற்று திட்டம்: எம்எல்ஏ சதாசிவம் ஆய்வு!
மேட்டூா் காவிரி சரபங்கா உபரி நீரேற்றுத் திட்டப் பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மேட்டூா் அணையின் நீா்த்தேக்க பகுதியான திப்பம்பட்டியில் காவிரி சரபங்கா உபரி நீரேற்று திட்டத்திற்கான பிரதான நீரேற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. ரூ.565 கோடி மதிப்பீட்டில் 100 ஏரிகளுக்கு உபரி நீரை நிரப்புவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.
இத் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் கேட்டறிந்தாா். உபரி நீரேற்று திட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள 19 மின் மோட்டோா்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஐந்தாவது மின் மோட்டாரை இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் எம்எல்ஏ சதாசிவம் கூறியதாவது: மேட்டூா் காவிரி சரபங்கா உபரி நீரேற்றுத் திட்டத்தில் 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஏரிகளுக்கு இடையே உள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் திட்டம் முழுமை பெறாமல் உள்ளது.
இதற்கு உடனடியாக நீா்வளத் துறை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுத்து திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.