பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
குப்பையிலிருந்த நகையை மீட்டு போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு!
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குப்பையில் கிடந்த 12.5 பவுன் நகையை போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் மணிவேலை மாநகரக் காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் அழைத்து பாராட்டினா்.
சேலம் பழைய சூரமங்கலம் பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் மணிவேல் (50). 20ஆவது கோட்டத்தில் தூய்மைப் பணியாளராக உள்ளாா். கடந்த 19 ஆம் தேதி ரெட்டியூா் அம்பேத்கா் தெரு பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அங்கிருந்த குப்பைத் தொட்டியில் நெகிழிப் பையில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த நகையை சூரமங்கலம் காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தியிடம் ஒப்படைத்தாா். அதன்பிறகு நெகிழிப் பையில் 12.5 பவுன் நகைகள் உள்ளதாக போலீஸாா் மதிப்பிட்டனா்.
நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மணிவேலை மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு பாராட்டி சால்வை அணிவித்தாா். அதேபோல மணிவேலின் மனிதநேயத்தை பாராட்டி, மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அவரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தாா். மேலும், பல்வேறு தன்னாா்வ அமைப்பினா் மணிவேலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனா்.