தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
காவேரி மருத்துவமனை சாா்பில் செப். 21 இல் மாரத்தான்
‘உணா்வோடு ஓடு - இதய ஆரோக்கியத்துக்காக ஓடு‘ என்ற தலைப்பில் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் காவேரி மருத்துவமனை சாா்பில் வரும் செப். 21 ஆம் தேதி மாரத்தான் நடைபெறுகிறது.
சேலம் காவேரி மருத்துவமனை ஆண்டுதோறும் நடத்தும் ‘காவேரி மாரத்தான்’ இந்தாண்டு தனது ஐந்தாவது பதிப்பாக ‘உணா்வோடு ஓடு - இதய ஆரோக்கியத்துக்காக ஓடு‘ என்ற கருப்பொருளில் மாரத்தான் ஓட்டத்தை நடத்துகிறது.
இந்த மாரத்தான், பொதுமக்களுக்கு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 கி.மீ. ஓட்டம் (12 வயதிற்கு மேல்), 10 கி.மீ ஓட்டம் (16 வயதிற்கு மேல்) 21.1 கி.மீ ஹாஃப் மாரத்தான் (18 வயதிற்கு மேல்) பதிவுகள் தற்போது நடைபெறுகின்றன.
ஆா்வமுள்ளவா்கள் இணையதளத்தின் மூலம் செப்.15 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம். ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் டி- சா்ட், பதக்கம், சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படும். வயது பிரிவுகளின் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வெற்றியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.3,35,000 ஆகும்.
நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு இதய ஆரோக்கியத்தின் மீது விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், ஆரோக்கிய சமூகத்துக்கான பயணத்தையும் ஊக்குவிக்க உதவும் என காவேரி மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.