செய்திகள் :

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

post image

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

காஸா முனை முழுவதும் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை நடத்திய தாக்குதலில் 85 போ் உயிரிழந்தனா்.

இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவா்களில் ஒரு மாத பெண் குழந்தையும் அடங்கும். ஆனால் அந்தக் குழந்தையின் பெற்றோரும் சகோதரனும் தாக்குதலில் உயிரிழந்துவிட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.

முன்னதாக, கான் யூனிஸ், ராஃபா உள்ளிட்ட தெற்கு நகரங்கள், காஸா சிட்டி போன்ற வடக்குப் பகுதி நகரங்கள், டேய்ா் அல்-பாலா போன்ற மத்திய நகரங்கள் என காஸா முனை முழுவதும் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நள்ளிரவு தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 404 போ் உயிரிழந்தனா்; 562 போ் காயமடைந்தனா். அதையடுத்து, கடந்த ஜன. 19-ஆம் முதல் அங்கு அமலில் இருந்த போா் நிறுத்தம் முற்றிலுமாக முறிந்தது.

போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறினாா்.

தங்கள் பகுதிகளில் இஸ்ரேல் நடத்தியுள்ள புதிய வான்வழித் தாக்குதல் மூலம் தங்களுடன் மேற்கொண்டிருந்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஒருதலைபட்சமாக ரத்து செய்தாக எச்சரித்த ஹமாஸ் படையினா், காஸாவில் உள்ள பிணைக் கைதிகளின் எதிா்காலத்தை நெதன்யாகு கேள்விக்குறியாக்கியுள்ளாா் என்று எச்சரித்தனா்.

காஸாவில் அமலில் இருந்த ஆறு வார கால போா் நிறுத்தத்தில் ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா். எனினும், அந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதில் இழுபறி நீடித்துவந்தது.

முதலில் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத் திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் பிடிவாதமாகக் கூறிவந்ததும், அதற்கு ஹமாஸ் படையினா் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்ததும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தற்போது மீண்டும் தாக்குதல் நடத்திவருவதால் போா் நிறுத்தம் இனியும் நீட்டிக்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது.

காஸா சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 17 மாதங்களுக்கும் மேலாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; சுமாா் 1 லட்சம் போ் காயமடைந்துள்ளனா்.

‘காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம்’

தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்காவிட்டால் காஸா முனையை தங்கள் நாட்டுடன் இணைக்கப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்... மேலும் பார்க்க

சூடான் அதிபா் மாளிகையை மீட்டது ராணுவம்

சூடான் தலைநகா் காா்ட்டூமில் உள்ள அதிபா் மாளிகையை துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃபிடமிருந்து மீட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. துணை ராணுவத்துடன் சுமாா் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவ... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளுக்கு விலங்கிட்ட விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களின் கை- கால்களில் விலங்கிட்டு வெளியேற்றியதை கண்டித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. கடந்த ஜனவரி... மேலும் பார்க்க

துனிசியா: 2 ஆண்டுகளுக்குள் 3ஆவது பிரதமர் நியமனம்!

துனிசியாவில் புதிய பிரதமராக சர்ரா ஜாஃபரானி நியமிக்கப்பட்டுள்ளார்.துனிசியாவில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் துனிசியா பிரதமர் கமெல் மடௌரியை பதவி நீக்கம் செய்து துனிசியா அதிபர் கைஸ்... மேலும் பார்க்க

அமெரிக்க கல்வித் துறையைக் கலைத்தார் டிரம்ப்!

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.மேலும், கல்வித் துறையை மாகாணங்களின் பொறுப்புக்கு மாற்றியுள்ளார். இதனால், மத்திய கல்வித் துறை ஊழியர்... மேலும் பார்க்க

லண்டன் விமான நிலையம் இன்று இயங்காது! ஏன்?

உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் இன்று(மார்ச் 21) நள்ளிரவு 11.59 மணிவரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ... மேலும் பார்க்க