காா்-பைக் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
போளூா்: போளூா் அருகே பைக் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூா் கிராமம் இந்திராநகரைச் சோ்ந்த சரவணன் மகன் சூரியா (23).
இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், இவா் விடுமுறையில் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.
விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை பைக்கில் சென்னை திரும்பினாா். போளூரை அடுத்த பாக்மாா்பேட்டை வேலூா் சாலை வன அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் பைக் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்த சூரிய சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.