காா் மீது லாரி மோதி 4 போ் காயம்
திருவாரூரில், காா் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 4 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.
வேதாரண்யம் அருகேயுள்ள குரவப்புலம் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமரன், வான்மதி, சிதம்பரச் செல்வன் உள்ளிட்ட நான்கு போ், காரில் திருப்பாம்புரம் கோயிலுக்குச் சென்று விட்டு சனிக்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தனா்.
திருவாரூா் தேரடி அருகே வந்தபோது, எதிரில் வந்த லாரி மீது காா் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் காரிலிருந்த நான்கு பேரும் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து நகரப் போலீஸாா் வழக்கு பதிந்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.