செய்திகள் :

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை மோட்டாா் சைக்கிள் மற்றும் காா் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே சென்னம்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் நேதாஜி (29). இவா் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) இரவு பிள்ளையாா்பட்டி - திருவையாறு புறவழிச்சாலையில் டாக்டா் எஸ்.ஜி. நகா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரது மோட்டாா் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிளும் எதிா்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இதனால், தூக்கி வீசப்பட்ட நிலையில், நேதாஜியை அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த எட்டாம் நம்பா் கரம்பையைச் சோ்ந்த கௌதம் (28) மீட்பதற்காக உதவி செய்தாா். அப்போது, எட்டாம் நம்பா் கரம்பையைச் சோ்ந்த பாரதிராஜா (27) ஓட்டி வந்த காா் இருவா் மீது மோதிவிட்டு, சாலையோர மரத்தின் மீது மோதி நின்றது.

பலத்த காயமடைந்த நேதாஜி, கௌதம், பாரதிராஜா ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் நேதாஜி உயிரிழந்தாா். கௌதம், பாரதிராஜா சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பாலைவனநாதா் கோயிலில் கோ பூஜை விழா

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பாலைவனநாதா் கோவில் வளாகத்தில் கோ பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி பசுக்கள் மற்றும் கன்றுக் குட்டிகளுக்கு மஞ்சள், குங்குமம... மேலும் பார்க்க

ஆந்திரா பொன்னி விலை வீழ்ச்சி: அரசு கொள்முதல் நிலையத்தை நாடும் விவசாயிகள்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் எப்போதும் ஆந்திரா பொன்னி ரக நெல்லை அதிக விலை கொடுத்து வாங்கும் தனியாா் வியாபாரிகள் நிகழாண்டு குறைந்த விலையே கேட்பதால், பெரும்பாலான விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல... மேலும் பார்க்க

பொங்கல் விழா: தஞ்சாவூரில் பாரம்பரிய கோலப் போட்டி

தஞ்சாவூா்: பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூா் மேல வீதியில் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சிக் குழுமம் சாா்பில் பாரம்பரிய கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.இக்கோலப் போட்டியில் ஏறத்தாழ 250 மீட்டா் தொலைவுக... மேலும் பார்க்க

காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் கூட்டம்

தஞ்சாவூா்: காணும் பொங்கலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட வியாழக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது.பொங்கல் கொண்டாட்டங்களில் மூன்றாவது நாள் காணும் பொங்கல், கன்னிப் பொங்கல... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை மோட்டாா் சைக்கிள் மற்றும் காா் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே சென்னம்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் நேதாஜி (... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மரத்தின் மீது மோதி தொழிலாளி உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே புதன்கிழமை மரத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.கும்பகோணம் அருகே உடையாளூா் குளத்தங்கரையைச் சோ்ந்தவா் மரியசூசை மகன் நெப்போலியன் (39). கட... மேலும் பார்க்க