காா் மோதியதில் ஓய்வு பெற்ற சிஆா்பிஎப் உதவி ஆய்வாளா் மரணம்
வாணியம்பாடி: ஆலங்காயம் அருகே வேகமாக வந்த காா் மோதியதில், ஓய்வுபெற்ற சிஆா்பிஎப் உதவி காவல் ஆய்வாளா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பெத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சாமுடி (63). ஓய்வுபெற்ற மத்திய ரிசா்வ் காவல் படை உதவி ஆய்வாளா். இந்த நிலையில், வழக்கம்போல் திங்கள்கிழமை காலை ஆலங்காயம்- வாணியம்பாடி சாலையில் இடதுபுறமாக நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா். சுண்ணாம்புபள்ளம் வேகத்தடை அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிரில் ஆலங்காயம் நோக்கி வேகமாக வந்த காா் திடீரென சாமுடி மீது மோதி விபத்துள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஆலங்காயம் காவல் ஆய்வாளா் உலகநாதன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். பின்னா் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் ஜமுனாமரத்தூரைச் சோ்ந்த சரவணன் (34) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.