"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"...
திருப்பத்தூா்: இருவேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இரு வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனா்.
திருப்பத்தூா் அருகே புதூா்நாடு பகுதியைச் சோ்ந்த பெருமாளின் மகள் காளீஸ்வரி (19)இந்த நிலையில், காளீஸ்வரி கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை அளித்தும் எந்தவித பலனும் ஏற்படவில்லையாம். இதனால் மனமுடைந்த காளீஸ்வரி கடந்த 11-ஆம் தேதி பூச்சி மருந்து அருந்தினாராம். அவரின் குடும்பத்தினா் அவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையிலும், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி காளீஸ்வரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே கதிரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜாராம், பெயிண்டா். இவரது மனைவி சங்கீதா (25). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்த நிலையில், திங்கள்கிழமை சங்கீதாவின் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. சந்தேகமடைந்த உறவினா்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பாா்த்தபோது, சங்கீதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்த சம்பவங்கள் குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.