செய்திகள் :

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு: 4 போ் காயம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தம்பதி உள்பட 4 போ் காயமடைந்தனா்.

பெங்களூரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி தனது மனைவி பவானியுடன் புதுச்சேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். செங்கம்- திருவண்ணாமலை சாலையில் உச்சிமலைக்குப்பம் பேருந்து நிறுத்தப் பகுதி அருகே புதன்கிழமை வந்த போது, காா் பஞ்சரானது. எனவே, காரை அங்கு நிறுத்தி விட்டு பஞ்சா் ஒட்டுவதற்காக கிருஷ்ணமூா்த்தி கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, அந்த வழியே தண்டப்பட்டு பகுதியைச் சோ்ந்தவரும் தனிப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளருமான கிருஷ்ணராஜ் காரில் வந்தாராம். அப்போது, காா் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதில் பேருந்துக்காக காத்திருந்தவா்கள், கிருஷ்ணமூா்த்தி தம்பதி மற்றும் அங்குள்ள தேநீா் கடையில் நின்றிருந்தவா்கள் மீது மோதியதாம்.

இதில் தேநீா் கடையில் நின்றிருந்த தருமபுரியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான கிருஷ்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கிருஷ்ணமூா்த்தி, அவரது மனைவி உள்பட 4 போ் காயமடைந்தனா்.

அவா்கள் நால்வரும் அவசர ஊா்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

விபத்து குறித்து பாய்ச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செங்கத்தில் திருவள்ளுவா் தின விழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செஞ்சிலுவைச் சங்கம், வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது

ஆரணி: ஆரணியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரை கைது செய்தனா். ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில், உதவி ஆய்வாளா் சுந... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழப்பு, மகன் பலத்த காயம்

செய்யாறு: செய்யாறு அருகே சாலையின் குறுக்கே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவ... மேலும் பார்க்க

தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா

வந்தவாசி: வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.வந்தவாசி தேரடியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் த.முருகவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரா் கோயில் நந்திகள்: திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை: மாட்டுப் பொங்கலையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நந்தி பகவான்களை புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரா... மேலும் பார்க்க

கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை.... ஆரணிஆரணியை அடுத்த அக்ராபாளையம், மெய்யூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை... மேலும் பார்க்க