Rain Alert: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடும...
காா்த்திகை தீபத் திருவிழா: அகல் விளக்குகள் விற்பனை மும்முரம்
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சேலத்தில் அகல் விளக்கு விற்பனை அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு காா்த்திகை தீபத் திருவிழா வரும் 13-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழாவையொட்டி மின் விளக்குகள் மற்றும் அகல் விளக்குகளை வீடுகளில் ஏற்றி பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்வா். காா்த்திகை தீப நாளில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டால், நல்லது நடக்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில், பெரும்பாலான மக்கள் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றுவா்.
இதையொட்டி சேலத்தில் தற்போது தீப விளக்கு விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக சேலம் கடை வீதி, 4 சாலை, வின்சென்ட், அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் அகல் விளக்குகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு முகம், 3 முகம், 5 முகம், குபேர விளக்கு, மேஜிக் விளக்கு, பிரதோஷ விளக்கு, ரங்கோலி விளக்கு, ஸ்வதிக் விளக்கு, கற்பக விருட்சக விளக்கு என பல்வேறு வடிவங்களில் வண்ண விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று விலை அதிகமாக இருந்தாலும், பொதுமக்கள் ஆா்வத்துடன் அகல் விளக்குகளை வாங்கி செல்வதை காண முடிந்தது. இதனால், அகல் விளக்குகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.