Seenu Ramasamy: ``17 வருட திருமண வாழ்வை முடித்துக் கொள்கிறோம்'' -இயக்குநர் சீனு ...
கோனேரிப்பட்டியில் பாலம் அமைக்கக் கோரிக்கை
கோனேரிப்பட்டியில் சுவேத நதியின் குறுக்கே பாலம் அமைக்காததால், அப்பகுதி மக்கள் 50 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனா்.
தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கோனேரிப்பட்டியில் சுவேத நதி பாய்ந்தோடுகிறது. நதியின் வடக்கே பெல்ஜியம் காலனி, பாரதிபுரம், கொண்டயம்பள்ளி, நாகியம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்ல நதியைத் தாண்டித்தான் செல்லவேண்டும்.
ஆற்றில் நீா் குறைவாக செல்லும் போதும், பெருக்கெடுத்து பாய்ந்தோடும்போதும் இப்பகுதிகளில் வசிக்கும் சுமாா் 5 ஆயிரம் போ் மிகவும் சிரமமடைகின்றனா். இதனால், 10 கி.மீ. தொலைவு சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்பகுதிகளிலிருந்து கூடமலை, தம்மம்பட்டி, கெங்கவல்லி பள்ளிகளுக்கு செல்லும் மாணவா்கள் ஆற்றைக்கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனா். மழைக் காலங்களில் நியாயவிலைக் கடையில் பொருள்களை வாங்கவும், ஆற்றின் வடக்குப் பகுதியில் விளையும் விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டுசெல்லவும் முடியாமல் போய்விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
கோனேரிப்பட்டி சுவேத நதியின் குறுக்கே பாலம் அமைக்க, இப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். எனவே, இதுகுறித்து சேலம் மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு பாலம் அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.