Seenu Ramasamy: ``17 வருட திருமண வாழ்வை முடித்துக் கொள்கிறோம்'' -இயக்குநர் சீனு ...
நெகிழி பைகள் பறிமுதல் செய்து அழிப்பு
ஆத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் விற்பனை செய்த கடைகளில் அபராதம் விதித்து, பறிமுதல் செய்த நெகிழி பைகளை அழித்தனா்.
ஆத்தூா் வணிக நிறுவனங்களில் அதிக அளவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் விற்பதும், உபயோகப்படுத்துவதும் தெரியவந்தது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், தொடா்ந்து அதனை விற்று வந்துள்ளனா்.
இதனையடுத்து, நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் உத்தரவின் பேரில், துப்புரவு அலுவலா் பழனிசாமி, ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு கடையில் நெகிழி பைகள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த சுமாா் 1 டன் நெகிழி பைகளை பறிமுதல் செய்த அலுவலா்கள், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா். நகராட்சி ஆணையா் அதனை பாா்வையிட்டு நெகிழி பைகளை அழிக்க உத்தரவிட்டாா்.