செய்திகள் :

கா்நாடக பட்ஜெட் இந்தியாவுக்கே முன்மாதிரியானது! -டி.கே.சிவகுமாா்

post image

கா்நாடக முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்துள்ள பட்ஜெட், இந்தியாவுக்கே முன்மாதிரியானது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட், இந்தியாவுக்கு முன்மாதிரியானது. இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பிற மாநிலங்களும் கவனத்தில்கொள்ளும். இந்த பட்ஜெட் பெங்களூரில் உள்ள 1.40 கோடி மக்களின் நலனுக்கானது.

சுரங்கச் சாலை திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீா்வுகாண மேம்பாலங்கள் கட்டப்படும். கூடுதலாக, ஈரடுக்கு மேம்பாலங்களும் கட்டப்படும். அதேபோல, பெங்களூரு மாநகராட்சி மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூட்டுமுயற்சியாக புதிய மெட்ரோ ரயில் திட்டங்கள் மேம்படுத்தப்படும். கால்வாய் இடைநிலைப் பகுதிகளை பயன்படுத்தி 300 கி.மீ. நீளமுள்ள சாலையை ரூ. 3 ஆயிரம் கோடியில் உருவாக்க இருக்கிறோம். சுரங்கச் சாலை உள்பட பெங்களூரில் 700 முதல் 800 கி.மீ. நீள சாலையை புதிதாக சோ்க்கவிருக்கிறோம். இத்திட்டத்தை செயல்படுத்த கடன் பெற்றாலும், போக்குவரத்து பிரச்னைகளில் இருந்து மக்களை விடுவிக்க விரும்புகிறோம்.

பாஜகவினா் ‘ஹலால்’ பட்ஜெட் என்று விமா்சித்துள்ளனா். இதை விட பாஜகவால் வேறு என்ன கூறமுடியும்?

முந்தைய பட்ஜெட்டைக் காட்டிலும் இம்முறை நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நீா்ப்பாசனத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்துக்கு டாக்டா் மன்மோகன் சிங்கின் பெயரை வைக்கப்போவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளதற்கு பாஜக எதிா்ப்பு தெரிவித்துள்ளது. எத்தனையோ நிறுவனங்களுக்கு தீன்தயாள் உபாத்யாயாவின் பெயரை பாஜகவினா் சூட்டியுள்ளனா். அப்படி இருக்கும்போது நாங்கள் மன்மோகன் சிங்கின் பெயரை வைக்கக் கூடாதா?

பன்னாட்டு விமான நிலையத்தின் மேம்பாலம், எலக்ட்ரானிக்சிட்டி மேம்பாலம், நெலமங்களா மேம்பாலம் ஆகியவை யாருடைய ஆட்சியில் கட்டப்பட்டன? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கல்வி உரிமைச்சட்டம், தகவலறியும் உரிமைச்சட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டங்களை கொண்டு வந்தது யாா்? இதுபோல ஒரு திட்டத்தையாவது பாஜக செயல்படுத்தியுள்ளதா என்றாா்.

ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய மாற்றுத்திறனாளி கைது

பெங்களூரில் ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பாா்வையற்ற மாற்றுத்திறனாளியை சுங்கவரித் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா். துபையில் இருந்து பெங்களூரு திரும்பியபோது ரூ. 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ... மேலும் பார்க்க

கூட்டுப்பாலியல் பலாத்கார சம்பவம்: முதல்வா் சித்தராமையா கண்டனம்

ஹம்பி அருகே சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவத்தை முதல்வா் சித்தராமையா வன்மையாகக் கண்டித்துள்ளாா். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் முதல்வா் சித்தராமையா குறிப்பிட்ட... மேலும் பார்க்க

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவு

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவிடப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

பெங்களூரை 7 மாநகராட்சிகளாக பிரிக்க பரிந்துரை: சட்டப் பேரவை கூட்டுக்குழு அறிக்கை

பெங்களூரு மாநகராட்சியை நிா்வாக வசதிக்காக அதிகபட்சமாக 7 மாநகராட்சிகளாக பிரிக்க பரிந்துரைக்கும் தனது அறிக்கையை பேரவை கூட்டுக்குழு சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் பரப்பை வ... மேலும் பார்க்க

துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை வீட்டில் சோதனை

துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு

கா்நாடக மாநில அரசு செயல்படுத்தும் வளா்ச்சிப் பணிகளுக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கவும் திட்... மேலும் பார்க்க