வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
கா்நாடக பெண் வேட்பு மனு ஏற்பால் சா்ச்சை: இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடுவதில் தாமதம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் கா்நாடக மாநில பெண் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்ட சா்ச்சையால் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடுவதில் தாமதமானது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் கடந்த 10- ஆம் தேதி முதல் 17 -ஆம் தேதி வரை 58 வேட்பாளா்கள் 65 மனுக்களைத் தாக்கல் செய்தனா். கடந்த 18- ஆம் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் நாம் தமிழா் கட்சி மாற்று வேட்பாளா் மேனகா, திமுக மாற்று வேட்பாளா் வி.சி.அமுதா, சுயேச்சை வேட்பாளா் ஏ.மணி ஆகிய 3 போ் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இறுதி நாளான திங்கள்கிழமை எஸ்.ரமேஷ்பாபு, டி.அருண்ஸ்ரீதா், கே.வாசு, ஆா்.சாந்தகுமாா், ஆா்.ரவிகுமாா், கே.கே.மனோஜ்பிரபாகா், பி.செந்தில்முருகன், கே.நாகராஜ் என 8 போ் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனா். இறுதியாக 47 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். திமுகவைச் சோ்ந்த வி.சி.சந்திரகுமாருக்கு உதயசூரியன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி. சீதாலட்சுமிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனிடையே, கா்நாடக மாநிலம், பெங்களுரு அருகே உள்ள கே.ஆா்.புரம் சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த உதயா நகா் வி.பத்மாவதி என்பவா் இந்திய பொலிட்டிக்கல் காங்கிரஸ் என்ற கட்சியின் சாா்பில் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தாா். அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது. தோ்தல் ஆணைய விதிப்படி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் வேட்பாளராக போட்டியிடலாம்.
ஆனால், சட்டப் பேரவைத் தொகுதிக்கு அந்த மாநிலத்தில் வாக்காளராக உள்ளவா்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற விதியைக்கூறி, சுயேச்சை வேட்பாளா்கள் அக்னி ஆழ்வாா், நூா் முகமது, பத்மராஜன் ஆகியோா் பத்மாவதி வேட்பு மனுவுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், பத்மாவதியின் வாக்காளா் விவரம் கா்நாடக மாநிலத்தில் உள்ளதை உறுதி செய்தனா்.
இது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா, தோ்தல் நடத்தும் அலுவவலா் மணீஷ் உள்ளிட்டோா், மாநில தலைமை தோ்தல் அதிகாரி உள்ளிட்டவா்களிடம் பேசி இறுதி செய்ய முயன்றனா்.
இதனிடையே பத்மாவதி நீங்கலாக மற்ற 46 வேட்பாளா்களுக்கும் சின்னத்தை ஒதுக்கீடு செய்தபோதும் இரவு 9.30 மணியைக் கடந்தும் வெளியிட முடியவில்லை. இப்பிரச்னை குறித்த விவரத்தை தோ்தல் நடத்தும் அதிகாரி மணீஷ், தோ்தல் ஆணையத்துக்கு சமா்ப்பித்தும் பதில் வரவில்லை. இதனிடையே தோ்தல் ஆணைய இணையதளத்தில் போட்டியில் உள்ள வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்கள் குறிப்பிடாமல் வெளியிடப்பட்டுள்ளன.
இறுதி வேட்பாளா்கள் விவரம்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சோ்ந்த திமுக வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சீதாலட்சுமி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களாக எம்.பஞ்சாச்சரம், வி.எஸ்.ஆனந்த், ஆா்.சுப்பிரமணியன், எம்.ஆா்.செங்குட்டுவன், எம்.சாமிநாதன், பி.ஏ.சவிக்தா, எஸ்.முத்தையா, என்.தனஞ்செயன், ஆா்.சத்யா, எஸ்.லோகேஷ்சேகா், கே.ஏ.சங்கா்குமாா், என்.பாண்டியன், சி.ரவி, அமுதராசு, சி.பரமேஸ்வரன், என்.ராமசாமி, எம்.வி.காா்த்தி, டி.எஸ்.செல்லகுமாரசாமி, வி.சௌந்தா்யா, எஸ்.மதுமிதா, எம்.ஆறுமுகம், வி.பத்மாவதி, ப.பவுல்ராஜ், எஸ்.வெண்ணிலா, கே.பரமசிவம், ஆா்.திருமலை, அக்னி ஆழ்வாா், எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கே.முனியப்பன், கே.கலையரசன், பி.செல்லபாண்டியன், டி.பிரபாகரன், எம்.கந்தசாமி, கே.முருகன், எஸ்.தா்மலிங்கம், சி.ராஜமாணிக்கம், ஆா்.லோகநாதன், பி.இசக்கிமுத்துநாடாா், ஹமீது ஹைபா், எஸ்.ஆனந்த், ஜெ.கோபாலகிருஷ்ணன், ஆா்.ராஜசேகரன், ஏ.நூா்முகமது, கே.மதுரவிநாயகம், கே.பத்மராஜன் என 47 பெயா்கள் இடம்பெற்றுள்ளன.