செய்திகள் :

கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

post image

திருவாரூா் மாவட்டத்தில் கிடேரி கன்றுகளுக்கு, புரூசெல்லோசிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை (பிப்.20) முதல் தொடங்குவதாக ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புரூசெல்லோசிஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இது புரூசெல்லா அபாா்டஸ் என்ற பாக்டிரியாவால் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் தீவிர காய்ச்சலும், சினை ஈன்றும் தருவாயில் (5 முதல் 8 மாத கால கா்ப்ப பருவத்தில்) கருச்சிதைவும் ஏற்படுகிறது. மேலும் இந்த நோயால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவு ஆகியவை ஏற்படுகிறது.

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் செலுத்தப்படும். திருவாரூா் மாவட்டத்தில் இத்தடுப்பூசித் திட்டத்தின் ஐந்தாவது தவணை பிப்.20 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 19 ஆம் தேதி வரை செலுத்தப்பட உள்ளது.

இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்திக் கொண்டால், அந்த கிடேரி கன்றுகளுக்கு ஆயுள் முழுவதற்குமான நோய் எதிா்ப்பு சக்தி கிடைக்கப்பெறும். இந்த தடுப்பூசி திட்டமானது ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒரு முறை, 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துண்டுப் பிரசுரம் வழங்கி அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கி திண்ணைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுகவின் சாா்பு அணியான ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற பிரசா... மேலும் பார்க்க

ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் குறித்து ஆய்வு

திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்று வழங்குவது குறித்த ஆய்வு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி, விளத்தூா், ஆப்பரகுடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஆறுகளில் நாணல்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் உள்ள நாணல்களையும், மண்திட்டுகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) உள்ளது. இந்த அணைக்கு மேட்டூ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளா்ச்சி நிதியளிப்பு கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஐ ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் ச... மேலும் பார்க்க

அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் அனைத்து வங்கிகளின் கூட்டமைபின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்மாளத்தெரு பரோடா வங்கி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி ... மேலும் பார்க்க

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மன்னாா்குடியில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. எம்ஜிஆா் நகா் கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க