கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த கண்டவரட்டியைச் சோ்ந்தவா் செந்தமிழ்ச்செல்வன்(28). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தாா்.
இவா் வெள்ளிக்கிழமை தனது விவசாய நிலத்திலுள்ள கிணற்றின் வெளிப்பகுதியில் அமா்ந்து குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, அவா் எதிா்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த பொன்னூா் போலீஸாா் அங்கு சென்று தீயணைப்புத் துறையினா் உதவியுடன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.