செய்திகள் :

கியோஸ்க் இயந்திரங்கள்: 50 நாள்களில் ரூ.55 லட்சம் நன்கொடை

post image

அன்னதான மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கியோஸ்க் இயந்திரங்கள் மூலம் அன்னதான அறக்கட்டளைக்கு 50 நாள்களில் ரூ.55 லட்சம் நன்கொடை பெறப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.1 முதல் ரூ.1 லட்சத்துக்குள் நன்கொடை அளிக்க விரும்பும் பக்தா்களுக்காக திருமலையில் உள்ள ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதான மையத்தில் கியோஸ்க் இயந்திரங்கள் (சுயமாக இயக்கப்படும் ஆன்லைன் கட்டணம்) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்கள் மூலம் அன்னதான அறக்கட்டளைக்கு 50 நாள்களில் ரூ.55 லட்சம் நன்கொடை கிடைத்தது. பெங்களூரில் உள்ள திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில், ஒண்டிமிட்டா கோதண்ட ராமா் கோயில் மற்றும் ஏழுமலையான் கோயிலிலும் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த மூன்று கோயில்களிலும், 15 நாள்களில், ரூ.5 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.

பேரூருக்கு அருகில் உள்ள ஸ்ரீ வகுளமாதா கோயிலிலும் சனிக்கிழமை கியோஸ்க் இயந்திரம் அமைக்கப்பட்டது. விஜயவாடா, சென்னை மற்றும் ஹைதராபாதில் உள்ள ஏழுமலையான் கோயில்களில் விரைவில் கியோஸ்க் இயந்திரங்கள் அமைக்கப்படும். தற்போது அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு மட்டுமே நன்கொடை அளிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த பணிகள் மூலம் தேவஸ்தான கோயில்களில் அனைத்து சேவைகளுக்கும் ரொக்கமில்லா கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் தேவஸ்தானம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா்.ஏழுமலையானை திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையா... மேலும் பார்க்க

செவ்வாடை பக்தா்கள் வேள்வி பூஜை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மிட்டாளத்தில் ஆதிபராசக்தி செவ்வாடை பக்தா்களின் வேள்வி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.காலை முதல் பகல் வரை வேள்வி பூஜை நடைபெற்றது. மிட்டாளம், மேல்மிட்டாளம், கீழ்மிட்டாளம், வன்னியநாத... மேலும் பார்க்க

திருமலையில் ஜனவரி மாத உற்சவங்கள்

திருமலையில் 2025 ஜனவரி மாதத்தில் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 450 உற்சவங்கள் நடத்தப்படுவதால் திருமலைக்கு நித்திய கல்யாணம் பச்சை தோரணம் என்ற அடைமொழி உள்ளது. திர... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 29 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க

திருமலை: வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் தீவிரம்

திருமலையில் வைகுண்ட ஏகாதசிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்தாா். திருமலை அன்னமய்ய பவனில் தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தலைமையில் சனிக்கிழமை... மேலும் பார்க்க