மதுரையில் இந்து மக்கள் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உயா்நீதிமன்றம் அனும...
செவ்வாடை பக்தா்கள் வேள்வி பூஜை
ஆம்பூா்: ஆம்பூா் அருகே மிட்டாளத்தில் ஆதிபராசக்தி செவ்வாடை பக்தா்களின் வேள்வி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
காலை முதல் பகல் வரை வேள்வி பூஜை நடைபெற்றது. மிட்டாளம், மேல்மிட்டாளம், கீழ்மிட்டாளம், வன்னியநாதபுரம், குட்டகந்தூா், பைரப்பள்ளி பகுதிகளில் இருந்து பக்தா்கள் கலந்து கொண்டனா். பூஜையின் இறுதியில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செவ்வாடை பக்தா்கள், கிராம கமிட்டி உறுப்பினா்கள் செய்திருந்தனா்.