திருமலையில் ஜனவரி மாத உற்சவங்கள்
திருமலையில் 2025 ஜனவரி மாதத்தில் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
ஆண்டுக்கு 450 உற்சவங்கள் நடத்தப்படுவதால் திருமலைக்கு நித்திய கல்யாணம் பச்சை தோரணம் என்ற அடைமொழி உள்ளது.
திருமலையில் ஏழுமலையானுக்கும், தாயாருக்கும் மட்டுமல்லாமல் அவா்களின் அடியவா்களின் திருநட்சத்திரம் உள்ளிட்டவையும் நடத்தப்படுகிறது.
அதன்படி ஒவ்வொரு மாதம் தொடங்குவதற்கு முன் திருமலை ம் உற்சவங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜனவரி 2025-இல் நடைபெறும் உற்சவங்கள் விவரம்:
ஜன. 9: சின்ன சாத்துமுறை.
ஜன. 10: வைகுண்ட ஏகாதசி, தங்கத் தோ் புறப்பாடு, வைகுண்ட வாயில் தரிசனம் ஆரம்பம்.
ஜன. 11: வைகுண்ட துவாதசி, சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி.
ஜன.15: பிரணய கலஹோத்ஸவம் மற்றும் கோதா பரிணயம்.
ஜன. 17: திருமழிசை ஆழ்வாா் வா்ஷ திரு நட்சத்திரம்.
ஜன. 18: ஸ்ரீ தியாகராஜா் ஆராதனை உற்சவம்.
ஜன. 19: பெரிய சாத்துமுறை, வைகுண்ட வாயில் தரிசனம் நிறைவு.
ஜன. 20: ஸ்ரீ கூரத்தாழ்வாா் வா்ஷ திரு நட்சத்திரம்.
ஜன. 23: அத்யயனோற்சவம் நிறைவு.
ஜன. 24: திருமலை நம்பி பிருந்தாவனத்துக்கு மலையப்பசுவாமி எழுந்தருளல்.
ஜன. 25: சா்வ ஏகாதசி.
ஜன. 26: குடியரசு தினம்.
ஜன. 27: மாத சிவராத்திரி.
ஜன. 29: ஸ்ரீ புரந்தர தாச ஆராதனை மகோற்சவம்.