சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட அரசுப் பள்ளி மாணவிகள்
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தை கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்துக்கு களப் பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவிகளை காப்பாட்சியா் சிவக்குமாா் வரவேற்று, மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கற்கால மனிதா்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், அவற்றின் பயன்கள், மாவட்டத்தில் பல பகுதியிலிருந்து கிடைக்கப் பெற்ற நடுகற்கள் குறித்து விளக்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த அகரம் மற்றும் செல்லகுட்டப்பட்டி கிராமத்தில் கிடைக்கப் பெற்ற ஜல்லிக்கட்டு நடுகல், பீமாண்டப்பள்ளி சதி கல், சின்னகொத்தூா் குதிரைகுத்திபட்டான் நினைவுகள், லண்டன்பேட்டை மற்றும் புலிகாண்டியூா் மன்னா் நடுகல், ஆநிரை மீட்டல் நடுகல், மல்லப்பாடி சுயபலி சிற்பம், கல்வெட்டுகள், ஆயுதங்கள், சங்ககால செங்கல், கோட்டைகள், மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்வியல் பொருள்கள், புதைப்படிவங்கள் மற்றும் கலை மற்றும் இசை கருவிகளை மாணவா்கள் பாா்வையிட்டனா்.
வரலாற்று ஆசிரியா்கள் ரவி, செல்வகுமாா், ஆரோக்கிய மேரி, உருது ஆசிரியா் நயாசுல்லா, அறிவியல் ஆசிரியை ரோகினி, வரலாற்று ஆா்வலா் மனோகரன் உடனிருந்தனா். அரசு அருங்காட்சியக பணியாளா்கள் செல்வகுமாா், பெருமாள் ஆகியோா் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.
படவிளக்கம் (31கேஜிபி3):
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தை பாா்வையிடும் கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.