MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
கிருஷ்ணகிரியில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.1-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாணவா்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. நிகழாண்டு 12 நாள்கள் வீதம் ஐந்து கட்டங்களாக நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல்கட்ட பயிற்சி முகாம் ஏப். 1 முதல் ஏப். 13-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் ஏப்.15 முதல் ஏப். 27-ஆம் தேதி வரையிலும், மூன்றாம் கட்ட முகாம் ஏப். 29 முதல் மே 11ஆம் தேதி வரையிலும், 4 ஆம் கட்ட முகாம் மே 13-ஆம் முதல் மே 25-ஆம் தேதி வரையிலும் 5-ஆம் கட்ட முகாம் மே 27-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரையிலும் நீச்சல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியான காலை 7 முதல் 8 மணி வரையும், காலை 8 முதல் 9 மணி வரையும், காலை 9 முதல் 10 மணி வரையும், மதியம் 2 முதல் 3 மணி வரையும், 3 முதல் 4 மணி வரையும், 4 முதல் 5 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நீச்சல் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவா்கள் கட்டணமாக ரூ.1,500ஐ 18 சதவீத ஜிஎஸ்டியுடன் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு, 9080144183, 7401703487, 7305624554, 9751484846 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.